சனி, 17 மார்ச், 2012

செம்மொழி


செம்மொழி*
 பேரா. அ.ஜான் பீட்டர், mjf  வட்டாரத் தலைவர் 14

உலக மக்கள் பேசும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6760 என கணக்கிட்டுள்ளனர். இவற்றில் இந்தியாவில் மட்டும் 1652 மொழிகள் பேசப்படுகின்றன.
ஆனால் இவற்றுள் உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் மொழிகள் 6 மட்டுமே.
செம்மொழி (Classical Language)  என்பது  தொன்மையும் நீண்ட வரலாற்றுப் பின்புலமும் கலைத்திறனும் கொண்ட மொழிகளைக் குறிப்பதாகும். அவ்வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ  6 மொழிகளை உலகின் தொன்மையான மொழிகள் என்று அறிவித்துள்ளது
§  ஹீப்ரு (இயேசு பேசிய மொழி)
§  சீனம்
இவற்றுள் மக்களால் இன்றளவும் தொடர்ந்து இடையறாது 3000 ஆண்டுகளாகப் பேசப்பட்டு வரும் மொழிகள் தமிழும் சீனமும் மட்டுமே. மற்ற மொழிகள் மக்களால் பேசப்படாத இறந்த மொழிகளாக இருக்கின்றன. சமஸ்கிருதம்,இலத்தீன் மொழிகள் சமயம் சார்ந்த வழிபாட்டு மொழிகளாக அங்கீகாரம் பெற்றிருக்கின்றன.
ஒரு மொழியை செம்மொழியாக தகுதி உயர்த்த மொழியியல் அடிப்படையில் விதிகள் வகுத்துள்ளனர். அந்த விதிகள் அனைத்தும் தமிழுக்குப் பொருந்தி வருவதால் செம்மொழி எனும் நிலைக்கு தமிழ் உயர்ந்து விட்டது. உலக இயற்கை மொழிகளிலேயே மிக மிக மூத்த மொழியாக தமிழ் இருப்பினும் அதற்கு உரிய காலத்தில் செம்மொழி எனும் மதிப்பு காலம் தாழ்த்தி வழங்கியுள்ளமை சற்றே நெருடலானது.
தமிழ்ச் செம்மொழியின் தகுதிகள் 

ஒரு மொழியைச் செம்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் அதற்கு பதினொரு (11) தகுதிப்பாடுகள் இருக்க வேண்டும் என்று மொழியியல் வல்லுநர்கள் வரையறை செய்துள்ளனர். இந்தப் 11 தகுதிப்பாடுகளையும் உருவாக்கியவர்கள் மேலை நாட்டு மொழி அறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் பழம்பெரும் மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எந்த ஒரு மொழிக்கும் செம்மொழிக்குரிய 11 தகுதிகளும் முழுமையாக இல்லை. சமற்கிருதத்திற்கு 7 தகுதிகளும், இலத்தின், கிரேக்க மொழிகளுக்கு 8 தகுதிகளும் மட்டுமே உள்ளன என்பது அறிஞர்கள் கூற்று.

ஆனால், என்ன ஒரு வியப்பு என்றால், நம் அன்னைத் தமிழுக்கு மட்டுமே செம்மொழித் தகுதிப்பாடுகள் பதினொன்றும் முழுமையாக உள்ளது. மேல்நாட்டு வல்லுநர்கள் வகுத்த மொழித் தகுதிப்பாட்டுக்கு நம்முடைய தமிழ்மொழி முற்றும் முழுவதுமாக ஒத்துப் போவது மிகப்பெரிய வரலாற்று உண்மையாகும்.

இனி, தமிழ்ச் செம்மொழிக்கு இருக்கின்ற அந்தப் 11 தகுதிகளைக் காண்போம்:-

1.தொன்மை (Antiquity)
2.தனித்தன்மை (Individuality)
3.பொதுமைப் பண்பு (Common Characters)
4.நடுவு நிலைமை (Neutrality)
5.தாய்மைத் தன்மை (Parental Kinship)
6.பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture art and life experiences of the civilized society)
7.பிறமொழிக் கலப்பில்லாத் தனித்தன்மை (Ability to function independently without any impact or influence of any other language and literature)
8.இலக்கிய வளம் (Literary prowess)
9.உயர்சிந்தனை (Noble ideas and ideals)
10.கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)
11.மொழிக் கோட்பாடு (Linguistic principles)

இப்படி 11 தகுதிகளும் முழுமையாக பெற்றுள்ள தமிழ் மொழியைத் தாய்மொழியாகப் பெற்றதற்காக ஒவ்வொரு தமிழரும் பெருமையும் பீடும் கொள்ள வேண்டும். மொழியின் பெருமையை; வரலாற்றை; பாரம்பரியத்தை அறிந்து உணர்ந்துகொண்டால் தமிழர்கள் உலக இனங்களுக்கு இணையாக நிமிர்ந்து நிற்க முடியும் என்பது திண்ணம்.
தனித்த விழுமியங்களோடு உலகில் உய்வதற்கும் வாழ்வில் உயர்வதற்கும் தமிழர்களுக்குப் பெரும் தன்னம்பிக்கையத் தரவல்லது தமிழ்மொழி ஒன்றே. தமிழை முன்னெடுத்தால் ஒழிய தமிழர் வாழ்வு வளம் பெறாது. தமிழே தமிழரின் முகவரி என்பதை ஒவ்வொரு தமிழரும் உணர்ந்து தெளிய வேண்டும்.
*இக்கட்டுரை லயன்ஸ் ஹார்மனியின் சமீபத்திய இதழில்அவ்விதழின் ஆசிரியர் லயன் விஜயானந்த் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாகும். இக்கட்டுரை பற்றி பலரும் தொலைபேசிவழியாக பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.செம்மொழி என்றால் ஏதோ சொல்கிறார்கள் என்று இருந்தேனே தவிர அதுபற்றி ஒன்றும் தெரியாமல் இருந்தது. இப்போதுதான் எனக்குத் தெளிவு கிடைத்தது என்றார் விளக்குடி சாசனத்தலைவர் லயன் அடைக்கலசாமி. மற்றும் பாராட்டியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் வட்டாரத்தலைவர் பஷீர் அகமது, மாவட்டத் தலைவர் PMJF லயன் பிரேம், குடந்தை காவேரி லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ஐ வேல்முருகன்….
விஜயானந்த் அவர்களுக்கு நன்றி!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக