குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 மலர்களைப்பற்றிக் குறிப்பிடுவார்.
'ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கோடு வேரி, தேமா, மனிச்சிகை,
உரீஇநாறு அவிழ்தொத்து உங்தூழ்,
கூவிளம்,
எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான்பூங்குடகம்,
எருவை, செருவிளை, மணிப்பூங்குடசம்,
பயினி, வானி, பல்இனர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்இணர்க்
காயா,
விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,
குறீஇப்பூளை, குறுநறுங்கண்ணி,
குருசிலை, மருதம், விரிபூங்கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமல் பாதிரி,
செருத்தி, அதிரல், பெருந்தண்
சண்பகம்,
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,
தில்லை, பாலை, கல்இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்,
தாழை, தளவம், முள்தாட் தாமரை,
ஞாழல், மௌவல், நறுந்தாண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குழலி,
கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை,
காஞ்சி, பனிக்குலைக் கள்கமழ்
நெய்தல்,
பாங்கர், மாரவும், பல்பூந் தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க்
கொன்றை,
அரும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி
அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்பூந் தொன்றி,
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங்குருங்கத்தி,
ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மாஇருங்குருத்தும், வேங்கையும் '
என்பன அவை. இவற்றை இவையென அடையாளம் காணுதலில் இடரிருந்ததாலும் சிலவற்றைத் தவிர பல மலர்கள் இங்கே காட்சிக்குக் கிடைக்கின்றன. கற்கநிற்க வலைத்தளத்திற்கு நன்றி
படங்கள் வரிசை மாறி வந்திருக்கின்றன.












































































































கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக